ம.நிலாந்தன் (மூலம்), சி.ஜெயசங்கர் (மீளுருவாக்கம்), தெ.கிருபாகரன் (மொழிபெயர்ப்பு). மட்டக்களப்பு: சி.ஜெயசங்கர், இணைப்பாளர், மூன்றாவது கண் ஆங்கில மன்றம், மூன்றாவது கண்-உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
‘மூன்றாவது கண் ஆங்கில மன்றமும், மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவும் இரு வேறு தளங்களில் முன்னெடுத்து வருகின்ற பல்வேறு செயற்பாடுகளில் நாடக அரங்கச் செயற்பாடும் ஒன்றாகும். மூன்றாவது கண் ஆங்கில மன்றம் சமகாலத்திற்குப் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில் தொல்சீர் நாடகங்களையும், நவீன நாடகங்களையும் மேடையேற்றி வருகின்றது. இதில் தமிழில் இருந்து நாடகங்களை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தும், தழுவியும் மேடையேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் அமையும் நாடக எழுத்துருதான் திரு. தெ கிருபாகரனால் மொழிபெயர்க்கப்பட்ட ‘The Ashen Touch” நாடகமாகும். மனித முயற்சியின் கனியையும், அக்கனியை நச்சுக் கனியாக்கும் மனித இயல்பையும், அணு ஆற்றலுடன் தொடர்பு படுத்திச் சித்திரிக்கும் இந் நாடகம் இந்தப் பூமியில் வாழச் சந்தர்ப்பம் கிடைத்த மனிதர்கள், மனிதர்களது மட்டுமல்லாது, எல்லா உயிர்களினதும் சுடலையாக பூமியை ஆக்காது, சுவர்க்கமாக்கும் வாழ்தலுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த எண்ண ஓட்டத்தை ஆங்கிலம் வழி பூமியில் படரச் செய்வதில் கிருபாகரனதும் கலைத்துவ மொழியாக்கச் செயல் அற்புதமானது, மதிப்பிற்குரியது.’ (சி. ஜெயசங்கர் – இணைப்பாளர்). (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1422).