திக்குவல்லை கமால். பண்டாரகம: பரீதா பிரசுரம், 104, கஸ்ஸாலி மாவத்தை, அட்டுலுகம, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (கொழும்பு 11: Q.G.Graphics, 110- ¼, மலிபன் வீதி).
viii, 132 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-95926-8-8.
வானொலி நாடகங்கள் கொடிகட்டிப் பறந்த ஒரு காலத்தில் எழுதப்பட்ட ஏழு நாடகங்களின் தொகுப்பு இந்நூலாகும். நாடகங்களுக்கு ஊடாக சமூகப் பிரச்சினைகளை வானொலிக்கென்று வகுக்கப்பட்டுள்ள எல்லைக்குள் நின்றுகொண்டு, தைரியமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தியவர்களுள் கமால் முக்கியமானவர். நிராசை (ஐந்து காட்சிகளைக் கொண்டது), சத்தியங்கள் சாவதில்லை (மூன்று காட்சிகளைக் கொண்டது), நண்பர்கள் (ஆறு காட்சிகளைக் கொண்டது), விடிவுக்காக ஒரு முடிவு (ஏழு காட்சிகளைக் கொண்டது), கண்ணாடி மாளிகை (ஆறு காட்சிகளைக் கொண்டது), மயக்கங்கள் (மூன்று காட்சிகளைக் கொண்டது), பைத்தியம் (ஆறு காட்சிகளைக் கொண்டது) ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. ஆசிரிய உலகில் நிலவும் மனிதநேயமற்ற போக்கை நிராசை அம்பலப்படுத்துகிறது. ஏனைய ஆறு நாடகங்களும் குடும்பம், நட்பு என்பன சார்ந்த முரண்பாடுகளைத் தொனிக்க வைக்கின்றன. சத்தியங்கள் சாவதில்லை, ஈகையின் நோக்கத்தை தெளிவுபடுத்துகின்றது. பெருநாள்களுக்கு சிறிதாக வழங்கித் தம் தர்மசிந்தையை வெளிக்காட்டாமல் ஏழைகளுக்கு தொழில், கல்வி வாய்ப்புக்களை வழங்குவது நிரந்தர விடிவைத்தரும் என்பதை வலியுறுத்துகிறது. பால்ய நட்பின் வலிமையை நண்பர்கள் என்ற நாடகம் அசைபோடுகின்றது. விடிவுக்காக ஒரு முடிவு என்ற நாடகம் வர்க்க முரண்பாடுகளைத் தகர்க்கும் ஒரு போராளியின் உணர்வுகளை வெளிக்காட்டுவதாயுள்ளது. கண்ணாடி மாளிகை, பைத்தியம், என்பனவும் நமது சமூகச் சீர்கேடுகளை இடித்துக்கூறுவதாக அமைந்துள்ளன. இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் உதவியோடு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 78604).