மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: கே.ஜே.என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை).
xxvi, 151 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42626-3-8.
இலங்கையை ஆட்சிபுரிந்த ஐந்து மன்னர்களின் காலத்தில் நிகழ்ந்ததான கற்பனை கலந்த சில சம்பவங்களின் பிரதிபலிப்பாக இதிலுள்ள ஐந்து நாடகங்களும் எழுதப்பட்டுள்ளன. அநுராதபுரத்திலிருந்து கி.மு. 145 இலிருந்து கி.மு. 101 வரை 44 ஆண்டுகள் ஆட்சிசெய்த எல்லாளனின் வரலாற்றுக்காலச் சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டெழுந்த ‘மனவைரம்’, யாழ்ப்பாணத்தை நல்லூரிலிருந்து கி.பி. 1519 முதல் 1561 வரை ஆண்ட மன்னன் சங்கிலி செகராசசேகரனின் வரலாற்றைப் பின்னணியைக் கொண்ட ‘விதி’, 1798-1805 காலப்பகுதியில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் வன்னியை ஆண்ட இறுதி மன்னனான பண்டாரவன்னியனின் பின்னணியைக் கொண்ட ‘துரோகம்’, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் லங்காபுரியை ஆண்ட இலங்கை வேந்தன் இராவணேசனின் வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட ‘பெண்மை’, மகாபாரத காலத்தில் மாந்தையிலிருந்து ஆட்சிசெய்த சிற்றரசி அல்லிராணியின் பின்னணியைக் கொண்ட ‘சாபம்’ ஆகிய வானொலி நாடகங்கள் இதில் உள்ளன.