க.கலாமோகன். சென்னை 600024: விந்தன் வெளியீட்டகம், 57, வெள்ளாளர் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (சென்னை 600024: அலைகள் அச்சகம், 36, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம்).
91 பக்கம், விலை: இந்திய ரூபா 10.00, அளவு: 18×12.5 சமீ.
இன்றைய சமுதாயத்தில் அவலங்களும் அசிங்கங்களுமாய்க் காட்சி தருகின்ற பிரச்சினைகளைச் சமூக உணர்வோடு சுட்டிக்காட்டிப் படைக்கப்பட்ட ஓர் நாடகநூல். இதனுள்ளே உலவும் கதாபாத்திரங்கள் வாயிலாக சீதனப் பிரச்சினையை உள்ளடக்கமாகவும் ‘நாற்காலி’ மோகத்தை ஊடகமாகவும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1983 இல் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். இவரது கவிதைகள் டேனிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. கே.எல்.நேசமித்திரன் என்ற புனைபெயரிலும் எழுதியவர். புலம்பெயரும் முன்னர் கொழும்பில் பத்திரிகையாளராகப் பணியாற்றிவர். பிரஞ்சுமொழியில் புலமையுடையவர். இவரின் சில கோட்டோவியங்கள் புகலிட இதழ்களில் வெளிவந்துள்ளன. எக்ஸில் சஞ்சிகையில் இவரின் பல கதைகள் வந்துள்ளன. அதே இதழில் பிரஞ்சுக் கவிதைகள் சிலவும் உள்ளன. நுவு னுநுஆயுஐே (பிரஞ்சு மொழியிலான கவிதைத் தொகுப்பு), நிஷ்டை (சிறுகதைகள்)1999, வீடும் வீதியும் (நாடகநூல்), ஜெயந்தீசன் கதைகள் (கதைகள்) 2003 ஆகியவை இவரது படைப்பாக்கங்களில் சிலவாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71463).