15648 வீரகாவியம்: ஐந்து நாடகங்கள்.

சி.வ.ஏழுமலைப்பிள்ளை. கிளிநொச்சி: சிவ.ஏழுமலைப்பிள்ளை, காவேரி கலாமன்றம், 11/01, மலையாளபுரம் தெற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 182 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7825-01-4.

இந்நூலில் மாவீரன் ஆன்டனியின் வீரம் பொய்யான காதலால் தோற்ற கிளியோபாட்ராவின் வரலாறான ‘மாவீரனை மயக்கிய பேரழகி’, மராட்டிய வீரன் சிவாஜியின் வீர சரித்திரமான ‘வீரசிவாஜி’, உலகை வெற்றிகொண்ட அலெக்சாண்டரை எதிர்த்த மாவீரன் புருசோத்தம போரஸ் வரலாற்றை விளக்கும் ‘மாவீரன் போரஸ்’, இரு கரங்களையும் இழந்த நிலையிலும் வாயினால் வில் ஏந்திப் போரிட்ட வீராதி வீரன் இந்திரஜித்தனின் கதையான ‘வீராதி வீரன் இந்திரஜித்தன்’, மகாபாரதப் போரின் வெற்றிக்காக களப்பலியான அரவானின் வீரகாவியமான ‘வீரகாவியம்’ ஆகிய ஐந்து நாடகங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 74377).

ஏனைய பதிவுகள்