சோபோகிலிஸ் (கிரேக்க மூலம்), குழந்தை ம.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: கனிமொழி வெளியீட்டகம், மடம் ஒழுங்கை, கல்வியங்காடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்).
(4), 64 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 21×14 சமீ.
சோபோகிலிஸ் எழுதிய மன்னன் ஈடிப்பஸ் நாடகம் E.F.Watling அவர்களால் ஆங்கிலத்தில் முன்னதாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அதன் ஆங்கிலவழி தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூலாகும். இந்நாடகத்தின் முக்கிய பாத்திரங்களாக திபிலிசின் மன்னன் ஈடிப்பஸ் (Oedipus), ஈடிப்பசின் மனைவி ஜொகஸ்டா (Goeasta), ஜொகஸ்டாவின் சகோதரர் கிறியோன் (Creon), ஒரு அந்தக தீர்க்கதரிசியான தெய்ரீசியஸ் (Teiresias), ஆகியோர் வலம்வருகின்றனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64158).