15654 தவம் (குறுங்காவியம்).

காரை செ.சுந்தரம்பிள்ளை. லண்டன் : சிவலீலன் பதிப்பகம், 607, Whitton Avenue West, Greenford, Middlesex UB6 0DZ, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2018, 1வது பதிப்பு, ஜனவரி 1971. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360, பிரதான வீதி).

84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-1-9998206-2-6.

மகாகவி தண்டி என்பவர் வடமொழிக் கதாசிரியர்களிற் புகழ்பெற்றவர். இவர் எழுதிய தசகுமார சரிதம் என்னும் நூல் பிரபல்யமானது. அதிலுள்ள பல கதைகளுள் காமமஞ்சரி என்னும் கணிகை மாதின் கதையானது புதுமையும், அழகும் வாய்ந்தது. அந்தக் கதையின் ஓர் அம்சத்தை அடிப்படையாக வைத்து இக்காவியம் படைக்கப்பட்டுள்ளது. கணிகை மாது ஒருத்தி தந்திரமாக முனிவர் ஒருவரின் தவத்தைக் குலைத்தாள் என்னும் சிறு கருவொன்றைத் தவிர  ஏனையவை எல்லாம் ஆசிரியரின் கற்பனையே. இந்நூலின் முதற் பதிப்பு 1971இல் யாழ். இலக்கிய வட்டத்தினரால் வெளியிடப்பட்டிருந்தது.

ஏனைய பதிவுகள்