து.உருத்திரமூர்த்தி (மூலம்), எம்.ஏ.நுஃமான் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மஹாகவி நூல்வெளியீட்டுக் குழு, இணை வெளியீடு, பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
240 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-5881-03-1.
மஹாகவியின் (1927-1971) ஐம்பதாவது நினைவுதினத்தினை முன்னிட்டு வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் மஹாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் கல்லழகி (1959), சடங்கு (1961), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் 1965), கண்மணியாள் காதை (கலட்டி என்ற பெயரில் முதலில் 1966இல் எழுதப்பட்டது), கந்தப்ப சபதம் (1967), தகனம் (இ.முருகையனுடன் இணைந்து 1962இல் எழுதப்பட்டது) ஆகிய ஆறு காவியங்களையும், அவை சார்ந்த ஆறு பின்னிணைப்புகளையும் இந்நூல் கொண்டுள்ளது. பின்னிணைப்புகளாக கலட்டியும் கண்மணியாள் காதையும், வில்லுப் பாட்டு கண்மணியாள் காதைக்கு மஹாகவி எழுதிய முன்னுரை, தகனம் பற்றி முருகையன், தகனம்- துணைக்குறிப்புகள், நவீன தமிழ்க் காவியங்கள், மஹாகவியின் காவியங்கள் பிரசுர விபரம் ஆகிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 187ஆவது ஜீவநதி பிரசுரமாக வெளியீடு கண்டுள்ளது.