எம்.எம்.ஏ.அனஸ். மூதூர்-5: உமர் நெய்னார் புலவர் கழகம், மட்டக்களப்பு வீதி, பெரியபாலம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
91 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-38066-6-6.
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு கிழக்கு மாகாணத்தில் மூதூர்ப் பிரதேசம் செல்வத்தின் களஞ்சியமாகத் திகழ்ந்தது. தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுத் திகழ்ந்தது. வறுமை என்ற வார்த்தைக்கு இங்கு வாழ்வதற்கு இடமில்லாமல் போனது. இத்தகைய செல்வமும் செழுமையும் பெற்றுத் திகழ்ந்த மூதூர் இன்று போரினால் சிக்கித் தவித்து, வறுமையின் பிடியில் சிக்குண்டு தவிக்கின்றது. இக்காவியம் மூதூரின் பண்டைய பெருமை பேசுவதுடன் மாத்திரம் நின்றுவிடாது அதனை இன்றைய அவல வாழ்விலிருந்து முன்னேற்றும் வழியையும் காவிய வடிவில் தேடுகின்றது.