சுப்பிரமணியம் சிவலிங்கம். மட்டக்களப்பு: சுப்பிரமணியம் சிவலிங்கம், ஓய்வுநிலைக் கட்டிடப் பொறியியலாளர், 1வது பதிப்பு, நொவெம்பர் 2011. (மட்டக்களப்பு: நியூ கீன் அச்சகம், 73, முனை வீதி).
(4), 5-253 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×13.5 சமீ.
பேராசிரியர் சி.மௌனகுரு, பேராசிரியர் செ.யோகராசா, கலாநிதி ந.நடராசா, திரு. வி.ரி.சகாதேவராசா,ஆகியோரின் ஆரம்ப உரைகளையடுத்து, இக்காவியம் முத்தமிழ் வித்தகர் எங்கள் முதுசம், கங்கையில் கிடைத்த ஓலை, அணையில்லா இன்னிசை, வழக்கொழிந்த யாழிசை, கிழக்கிலங்கைத் தமிழகம், காரைதீவு என்னும் பேரூர், மயில்வாகனன் பிறந்தான், அன்னையின் மறைவு, மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர், கற்றலும் கற்பித்தலும், துறவி விபுலானந்தர், இலங்கையில் கல்விச் சேவை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர், மதுரை இயற்றமிழ் மகாநாட்டுத் தலைமையுரை, கரந்தைத் தமிழ்ச் சங்க மாநாடு, பிரபுத்த பாரதா ஆசிரியர், ஒலி அலையும் இயக்கமும், விபுலானந்தரின் சமயச் சிந்தனைகள், யாழ். நூல் அரங்கேற்றம், விபுலானந்த அடிகளின் மறைவு ஆகிய தலைப்புகளின் கீழ் இக்காவியம் விரிகின்றது.