15663 அப்பக்கடை நடக்கிறது.

உடுவை எஸ்.தில்லைநடராஜா. கொழும்பு 6: தில்லை நூலகம், 62/2/2, ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தை, வெள்ளவத்தை, 4வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 1991, 2வது பதிப்பு, 1992, 3வது பதிப்பு, 1996. (கொழும்பு 6: விகடன் அச்சகம், 541/2சீ, காலி வீதி, வெள்ளவத்தை).

106 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×13.5சமீ., ISBN: 978-955-43552-1-7.

உடுவை எஸ்.தில்லைநடராஜா எழுதிய வாசக் கட்டி (தினகரன், 1967), காலம் காத்திருக்குமா? (தினகரன், 1967), விருந்து (ராதா, 1968), சந்நிதி கோயில் சாப்பாடு (ஈழநாடு, 1970), பிரபலம் (தினகரன், 1968), நிர்வாணம் (கலைமலர், 1969: ஈழநாடு, 1974), இதுவும் ஒரு காதல் கதை (தினகரன், 1971), கன்னத்தில் (ஈழநாடு, 1972), பாமா படித்துக்கொண்டு இருக்கிறாள் (ஈழநாடு, 1972), ஷணப் பித்தம் (மல்லிகை 1973), ஒரு சோக நாடகம் தொடர்கிறது (மாணிக்கம், 1975), ஆனந்தமும் நிம்மதியும், அப்பக் கடை நடக்கிறது (தினகரன், 1976) ஆகிய பதின்மூன்று சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்