மு.தயாளன். மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
117 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4041-22-6.
மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். மகுடம் வெளியீட்டகத்தின் 26ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது. இதில் ஆசிரியர் 2020இல் எழுதிய பத்துச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கதைகள் யாவும் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில்; வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்களாகவே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அம்மாக்களும் அப்பாக்களும் (காற்றுவெளி, 2020), கடவுளைக் காணோம் (ஜீவநதி, 2020), என்ரை இவரின்ரை கதை (ஜீவநதி, 2020), ஒரு சாமானியனின் அழுகை (ஜீவநதி, 2020), நான்கு கடிதங்களும் நண்பனும் (தாயகம், 2020), வரட்டுக் கௌரவம் (காற்றுவெளி, 2020), ஒரு காதலின் முடிவு (ஜீவநதி, 2020), ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம் (காற்றுவெளி, 2020), அர்ப்பணம் (ஜீவநதி, 2020), ஆட்சி அதிகாரம் கைமாறுகிறது (ஜீவநதி, 2020) ஆகிய தலைப்புகளில் இவை வெளிவந்துள்ளன.