வாகரைவாணன் (இயற்பெயர்: ச.அரியரெத்தினம்). மட்டக்களப்பு: வள்ளல் பேதுருப்பிள்ளை உடையார் நினைவகம், வாகரை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் பிறின்ரஸ், இல.1, யேசு சபை வீதி).
(3), 58 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20.5×14 சமீ.
யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான வாகரைவாணனின் இருபதாவது இலக்கியப் படைப்பு இது. எங்கள் கேள்வி இது, மதர் திரேசா, அரசி உலகநாச்சியார் (கி.பி. 301-382), புதிய வியாபாரம், ஒரு மகாகவியின் சாயங்காலம், நெஞ்சில் சில நினைவுகள், பஞ்சாங்கக் கல்யாணம், இது ஒரு இருண்ட காலம், யாழ்ப்பாணத்தில் ஒரு பெத்தலகேம், உள்ளும் புறமும், அஸ்தமனத்தில் ஓர் உதயம் ஆகிய 11 சிறுகதை ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.