பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, மிசிசாகா, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, 2008. (சென்னை: சேது இன்போடெக்).
160 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
இந்நூலில் அழகு, சீட்டு, சகுனம், பென்சன், வடு, தம்பி, உக்குணா, சூப்பி, தாத்தா போட்ட கணக்கு, குடை, எதிர்பாராதது, வாரிசு ஆகிய 12 கதைகள் இடம்பெற்றுள்ளன. இவை யதார்த்தமானவை மாத்திரமல்ல. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களைப் பின்னணியாக வைத்து நகைச்சுவை கலந்து எழுதப்பட்டவை. பொன். குலேந்திரன் யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைக் கழகத்தில் பௌதிகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்வேறு அரபு, ஐரோப்பிய நாடுகளில் தொலைத்தொடர்புத் துறையில் பொறியியலாளராகப் பணியாற்றி இறுதியாக கனடாவில் டெலஸ் தொலைத்தொடர்பு தாபனத்தில் சிரேஷ்ட முகாமையாளராகப் பணியாற்றி ஒய்வுபெற்றவர். கனடாவில் குவியம் என்ற இணையத்தளத்தை நடத்துபவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60797).