அலெக்ஸ் பரந்தாமன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2014. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
vi, 58 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-4676-17-6.
போர்க்காலத்திலும் அதன் பின்னரும் மக்கள் அனுபவித்துவரும் வலிகளை இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளும் பிரதிபலிக்கின்றன. ‘அனலெனவாகிய நினைவுகள்’ என்ற கதை போரில் சொந்தங்களை இழந்த ஒருவனின் மனநிலைமையை வெளிப்படுத்துவதாயும், ‘நாயுண்ணிகள்’ என்ற கதை யுத்த காலங்களில் உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்களை பிரதிபலிப்பதாகவும், ‘சூனியங்கள்’ என்ற கதை யுத்தத்தின் பின்னரான வாழ்வியலில் தமிழ் மக்கள் – குறிப்பாகப் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களின் அவலம் தோய்ந்த நிலைமைகளை வெளிப்படுத்தவதாயும் உள்ளன. இவ்வாறே எஞ்சிய கதைகளான ‘எழுதா மௌனம் கலைகிறது’, ‘ஊனங்கள் ஒன்றல்ல’, ‘நம்பிக்கை வேர்கள்’, முருங்கை மரத்து வேதாளங்கள்’, ‘அதுவொரு காலம்’, ‘அழுகைகள் நிரந்தரமில்லை’ என ஒவ்வொரு கதையும் வெவ்வேறு தளங்களில் பயணித்தாலும், அனைத்தினதும் பகைப்பலம் ஈழத்து மண்ணின் மக்களின் மன உணர்வுகளை பல்வேறு கோணங்களில் பிரதிபலிப்பதாகவே உள்ளது. இது ஜீவநதியின் 38ஆவது பிரசுரமாகும்.