15670 ஆகாயத் தாமரைகள்: சிறுகதைத் தொகுப்பு.

புயல் (இயற்பெயர்: கலையருவி பெ. ஸ்ரீகந்தநேசன்). யாழ்ப்பாணம்: தாய்மொழி வளர்ச்சி மன்றம், வடமாகாணம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், கச்சேரியடி).

viii, 52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-955-7736-00-6.

இது புயல் எழுதிய ஒன்பது சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. வேதனையில் பூத்த வேப்பம்பூக்கள், மறக்கமுடியவில்லை, இரண்டு வேடங்கள், படராத முல்லை, கடந்தகால ஞாபகங்கள், ஆகாயத் தாமரைகள், விபத்து, நாளைய தேசம் உனது கைகளில், தொடர்கதை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. ‘படராத முல்லை’ என்னும் சிறுகதையில் சரியான தாய், தந்தையர் அமையாவிட்டால் பிள்ளைகளின் நிலைமை, குறிப்பாக பெண் பிள்ளைகளின் அவல நிலைமை எப்படியாகின்றது என்பதை வனஜா என்ற பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘மறக்க முடியவில்லை’ என்ற கதையில் ஒருதலைக் காதலையும், ‘இரண்டு வேடங்கள்’ என்ற கதையில் ஒரு பெண்ணின் பொய்யான காதலையும் ‘ஆகாயத் தாமரைகள்’ என்ற தலைப்புக் கதையில் இன, மத, மொழிகளுக்கு அப்பாற்பட்ட காதலையும் கருவாகக் கொண்டுள்ளார். இக்கதை தமிழ்-சிங்கள மக்களிடையே வகுப்புவாத அரசியல்வாதிகளால் விதைக்கப்பட்ட இன முரண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது. இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் ஒவ்வொன்றும் பல்வேறு கதைக்களங்களில் நின்று பேசப்படுவதால் முழுத் தொகுதியும் சுவாரஸ்யமானதாயுள்ளது.

ஏனைய பதிவுகள்