தேவகாந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
vi, 202 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×15 சமீ., ISBN: 978-955-4676-71-8.
ஆசிரியரின் இலக்கிய வாழ்வின் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த 25 சிறுகதைகளின் தொகுப்பாக ‘ஆதித்தாய்’ வெளிவந்துள்ளது. இது ஆசிரியரின் 15ஆவது நூலாயினும் இலங்கையில் பிரசுரமாகி வெளிவரும் முதலாவது நூலாகும். ஒரு கோடி பிச்சாபாத்திரங்கள், யுதிர்ஷ்டிரம், கறை ஆகிய மூன்றும் ஆசிரியரின் ஆரம்பகாலக் கதைகளாகவும், மூர்க்கம், துக்கத்தினோடேயும் வாழ்தலென்பது, வெளிப்பாடு ஆகிய மூன்று கதைகளும் அவரது இடைக்காலக் கதைகளாகவும், எஞ்சிய கதைகளான வலை, பின்னல் பையன் -2, ஜென்மாவும் உடைந்த விலாவெலும்புகளும், மின்னல் குறித்த ஆவேசங்கள், வன்மம், உயரப் பறத்தல், பேதலிப்பு, நீர்மாயம், சதுரக்கள்ளி, கடலையாச்சி, ஆதித்தாய், பேரணங்கு, ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும், தாவோவின் கதை, யுத்தம், பாம்பு, மனவெளி, கறுப்புப் பூனை, நுளம்பு ஆகியவை பிற்காலத்தில் இவர் எழுதிய கதைகளாகவும் கால ஒழுங்கில் தொகுக்கப்பட்டுள்ளன. ஜீவநதியின் 85ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் நூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65192).