நக்கீரன் மகள். மட்டக்களப்பு: மகுடம் பிரசுரம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, தை 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 யு, திருமலை வீதி).
xiv, 106 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-4041-26-4.
வடமராட்சி கிழக்கின் பொற்பதி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நக்கீரன் மகள், தனது 20ஆவது அகவை முதல் டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தாயகத்திலும், புகலிடத்திலும் தன் எழுத்துக்களால் பிரகாசித்துவரும் ஈழத்துப் படைப்பாளியான நக்கீரன் மகளின் சோறு, வேப்பமரம், வேற்றுமை, ஆழக்கீறல், மரியா நில்சன், போர்வை, அட்டை, அகம், இருட்டு, நாளை, உழுத்தம் பிட்டு ஆகிய பதினொரு சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ‘அமுது’ என்ற சிற்றிதழில் தனது கன்னிக் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியிருந்த இவர் ஐரோப்பிய தமிழ் ஊடகங்களில் தனது படைப்புகளுக்கான களத்தினை அமைத்துக்கொண்டவர். கவிதைகளும் கதைகளும் இவருக்கு கைவந்த கலையாயிற்று. 2017-2020 காலகட்டத்தில் இவரால் எழுதப்பெற்ற சிறுகதைகளே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பேசுகின்றன.