ஆர்.எஸ்.ஆனந்தன் (இயற்பெயர்: இ.சச்சிதானந்தம்). பருத்தித்துறை: இ.சச்சிதானந்தம், எல்லை ஒழுங்கை, தும்பளை, 1வது பதிப்பு, 2018. (பருத்தித்துறை: இ.லோகநாயகி, உரிமையாளர், விநாயகர் அச்சகம்).
xviii, 150 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-35668-0-5.
சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞராகவும் அறியப்பெற்ற எழுத்தாளர் ஆர்.எஸ்.ஆனந்தனின் பன்னிரு சிறுகதைகளின் தொகுப்பு. நல்லதோர் வீணை செய்தே, நான் நடந்த பாதை எல்லாம், மூன்றாவது முத்தம், அப்புச்சி இருக்கிறா, கனியாத கனவு, வதம், பூசைக்கேற்ற மலர், கிழக்கு மெல்ல வெளுக்கும், மண் பார்த்து விளைவதில்லை, மண் வாசனை, அந்த நாள் ஞாபகம், நிலவு சுடுவதில்லை ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.