கு.றஜீபன், சி.ரமேஷ், சு.ஸ்ரீகுமரன், இ.இராஜேஸ்கண்ணன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2019. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xxxiv, 1048 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ., ISBN: 978-955-70310-7-2.
இலங்கையின் தமிழ் இலக்கியவாதிகள் சி.ரமேஷ், கு.றஜீபன், சு.ஸ்ரீகுமரன் (இயல்வாணன்), இ.இராஜேஸ்கண்ணன் ஆகிய நால்வரும்; ஒன்றிணைந்து ஏழு தசாப்தங்களுக்கு முந்தைய ஈழச் சிறுகதைகளைத் தேடிச் சேகரித்து, ஒரு முழுமையை நாடிய தொகுப்பாக்கித் தந்திருக்கிறார்கள். கிராமத்துப் புழுதியின் வாசத்தை அள்ளித் தெளித்த கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன. இவை 1950ஆம் ஆண்டுவரை எழுதப்பட்டவை. அந்தக் காலப்பகுதியின் மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்த மறைந்த கதாபாத்திரங்களை நம் மனக்கண் முன் இக்கதைகள் நிறுத்தி எமது வாழ்வை பின்நோக்கிச்; சென்று வாழ்ந்தனுபவிக்கும் உணர்வினைத் தருகின்றன. ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை முதல் ‘அபலை’ ஈறாக 90 படைப்பாளிகளின் 176 சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.