நிவேதா உதயராயன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 126 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-4676-91-6.
இந்நூல் 306ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலில் ஆசை மனதளவு, இஞ்சினியர், உணர்வுகள் கொன்றுவிடு, உறவுகள், எப்போதும் இரவு, பெண் மனது, முடிவாகிப் போனது, ரயில் பயணம், வரம் வேண்டினேன், வாழ்வு வதையாகி, விதியின் சதி, வேப்பங்காய்கள், மனம் என்னும் மாயம், விடுதலை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவில் கிராமத்தில் பிறந்து தன் பதின்ம வயதில் பெற்றோருடன் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து, 18 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு வாழ்பவர் திருமதி நிவேதா உதயராயன். வரலாற்றைத் தொலைத்த தமிழர் (ஆய்வு), நிறம் மாறும் உறவுகள் (சிறுகதைகள்), நினைவுகளின் அலைதல் (கவிதை) ஆகிய வரிசையில் இவரது நான்காவது நூலாக இச்சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65185).