மலரன்னை. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
iv, 116 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-39-9.
இத்தொகுதியில் மலரன்னையின் 18 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. காலம் வெல்லும், அம்மாவின் புன்னகை, உயிர் சுமந்த கூடு, தரை தொட்ட அலை, ஒட்டும் உறவுகள், தனிமை, கறை, துப்பட்டி, சுரி, மாற்றுதவி, அனலுக்குள் அருவமாகி, விலை, உள்ளகத்தின் உசும்பல், சிரமதானம், காருணியம், ஆச்சியின் குழந்தை, அழல், வாழ்வின் குரூரங்கள் ஆகிய தலைப்புகளில் இவை முன்னர் உதயன்-சஞ்சீவி, வலம்புரி-சங்குநாதம், ஜீவநதி ஆகிய ஊடகங்களில் பிரசுரமாயிருந்தன. மலரன்னையின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். சமகாலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் பரவி அதன் கொடூரத்தினால் மனுக்குலத்தை நெருக்கடி நிலைக்கு ஆளாக்கியது மட்டுமல்லாமல் பல இலட்சம் உயிர்களை வேறு காவு கொண்டுள்ளது. இந்த நோய்த் தொற்றினால் எம் மண்ணில் மக்கள் படும் இடர்கள், சுகாதாரத் துறையினரின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் பற்றிய கருத்துக்களை முன்வைத்து இதிலுள்ள சில சிறுகதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது 153ஆவது ஜீவநதி வெளியீடாகும்.