15681 உருவங்களும் சில மனிதர்களும்.

தி.கேதீஸ்வரன். கல்முனை: அணங்கு வெளியீடு, 1வது பதிப்பு, 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiv, 74 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 19.5×13 சமீ., ISBN: 978-624-96246-0-3.

இந்நூலில் தாய்மை, உருவங்களும் சில மனிதர்களும், வலை, பப்பி, தாய் மண், அரசமரம், மண், கதறல், பாவத்தின் பரிசு, ஒரு காதல் மலர்கிறது, வரம்புகளின் எல்லையில், தவறிய அழைப்புக்கள், துரோகம், காதல் சிலுவை, சில கொஞ்சல்கள், சகித்துக்கொள்ள வேண்டிய கணங்கள், வாய்ச்சொல் வீரர்கள் ஆகிய 17 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தி.கேதீஸ்வரன் தனது பல்கலைக்கழக வாழ்வில் எழுதிய பல கதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. இவை  பெரும்பாலும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்திலும் அதற்குப் பிந்திய சில வருடங்களிலும் நிகழ்ந்த நிகழ்வுகளே. ஆசிரியரின் முதலாவது கதைத் தொகுதி இதுவாகும். தி.கேதீஸ்வரன் வவுனியா, குடியிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் 2015ஆம் ஆண்டு இயன் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றவர். வவுனியா பொது வைத்தியசாலையில் இயன்மருத்துவராகக் கடமையாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Unter das Blog ferner an der internetseite?

Content Genau so wie man Link-Probleme behebt Schlüsselelemente der Hauptseite Hat dir ihr Preis weitergeholfen? Abonniere unseren Newsletter Viel mehr Web-adresse-Empfehlungen Ended up being versteht