நவரட்ணம் சிறி (தொகுப்பாசிரியர்), நோர்வே: நோர்வே தமிழ்ச் சங்கம், தபால் பெட்டி இலக்கம் 127, 0982 ஒஸ்லோ, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (நாவலை: அபயன் இராஜதுரை, வசீகரா அட்வர்டைசிங், 98, கோவில் வீதி).
iv, 81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-8653-02-9.
நோர்வே தமிழ்ச்சங்கம் 2004இல் தாயக எழுத்தாளர்களிடையே நடாத்திய வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியில் தேர்வுசெய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. சிறுகதைகளை திரு.ந.கிருஷ்ணசிங்கம், இளவாலை விஜயேந்திரன் ஆகியோர் தேர்வுசெய்திருந்தனர். இத்தொகுப்பில் அர்த்தம் குலைந்த வாழ்க்கை (செ.மகேஷ், நெடுந்தீவு), பதிவு (மகாதேவன் மதிவீணா, வாழைச்சேனை), கனக்கும் கறுப்பு நிற சூட்கேஸ் (வி. கீதாஞ்சலி, வவுனியா), பயவெளி (ச.இராகவன், கரவெட்டி), புலரப் போகும் அந்தப் பொழுதுக்காய் (கனகசபை தேவகடாட்சம், திருக்கோணமலை), போலி முகம் (?), கருணையினாலல்ல (கே.எஸ்.ஆனந்தன், இணுவில்), எம்மதமாயினும் (எஸ்.ஜோன்ராஜன், மட்டக்களப்பு), என்னுயிர் நீதானே (புலோலியூர் செ.கந்தசாமி, பருத்தித்துறை), இன்னும் எத்தனை நாள் அடிமையாய் இருப்பாய் நீ (இரா.சடகோபன், மட்டக்களப்பு), நனவை நோக்கி (தம்பையா கயிலாயர், கொழும்பு 4), அழகம்மா (எ.தங்கத்துரை, மட்டக்களப்பு), ஆகிய பரிசுச் சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47407).