ச.முருகானந்தன். கண்டி: ஈஸ்வரன் பிரசுரம், இல. 126/1, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 2013. (கண்டி: ஈஸ்வரன் பிரின்டர்ஸ்).
iv, 204 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18×12 சமீ.
இத்தொகுப்பில் உன் அருமை அறியாமல் போனேனே அம்மா, எங்கேயும் மனிதர்கள், சோகத்தைச் சுமப்பவர்கள், எரியும் பிரச்சினைகள், மேகலாவின் கம்பியூட்டர், புதுப் பாதணிகளும் வெட்டுப் புண்களும், பேய்களுக்கு பயமில்லை, மனிதம் புரிகிறது, விகாரம், விலகிடும் திரைகள், எல்லோரும் மனிதர்களே, தூண்டில் மீன், வேலையில்லாதவன், சின்னம்மா, தொலைந்துபோன வசந்தங்கள், என்று தணியும் இந்த ..ஆகிய 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தீவிரமான யுத்தகாலத்தில் வன்னிப் பிரதேசத்தில் தங்கியிருந்து அங்கு வைத்திய சேவையாற்றிய விரல்விட்டெண்ணக்கூடிய வைத்தியர்களுள் டாக்டர் ச. முருகானந்தனும் ஒருவர். மருத்துவராக இருந்துகொண்டே மக்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தி வந்ததுடன் அவர்களது ஆத்மார்த்த உணர்வுகளை நேரடியாக கண்டனுபவித்து வந்ததுடன் அவற்றைத் தன் கதைகளின் கருப்பொருளாகக் கொண்டு அந்த அவல வரலாற்றை இலக்கியமாகப் பதிந்து வைத்தவர் இவர்.