மு.தயாளன். மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி).
110 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-624-5849-05-5.
மு.நற்குணதயாளனின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இந்நூலில் ஏழு கதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளன. அடையாளம் என்ற கதை Identity எனவும், தனிமை என்ற கதை Loneliness எனவும், எனது துணைவர் என்ற கதை My Partner எனவும், மாற்றம் என்ற கதை Realisation எனவும், எதிரொலி என்ற கதை Echo எனவும், வாழ்வே மாயம் என்ற கதை Miserable life எனவும், பரீட்சை என்ற கதை Test எனவும் மொழிபெயர்க்கப்பெற்று, இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இது 43ஆவது மகுடம் பிரசுரமாக வெளிவந்துள்ளது.