15698 காற்றில்மிதக்கும் தழும்பின் நிழல்.

வி.கௌரிபாலன். கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜீ. நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், 1வது பதிப்பு, மே 2016. (சென்னை: அருணா எண்டர்பிரைசஸ்).

264 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 22×15 சமீ.

கௌரிபாலனின் கதைகள் தன் இயல்பான தீவிரமும் நேரடித் தன்மையும் கொண்டவை. வாழ்வியக்கத்தின் பகுதிகளாக உயிரோட்டத்துடன் அமைந்திருப்பவை. சபிக்கப்பட்ட மனிதர்களின் அன்றாட துன்ப துயரங்களைத் தாண்டிய ஒரு துன்பியல் இக்கதைகளின் பின்னணியில் உறைந்து கிடக்கின்றது. கூர் நோக்கும், தெளிவான கண்ணோட்டமும், அசலான பாத்திரப் படைப்பும், இயல்பான உரையாடல்களும் கொண்ட இந்தக் கதைகள் கண்முன் விரியும் காட்சிகளாக முன்வைக்கப்படுகின்றன. இச்சிறுகதைத் தொகுப்பில் வி.கௌரிபாலன் எழுதிய தலையெழுத்து, தாயம்மா, அப்பே றட்ட, சினைக் காளை, மூக்கணாங் கயிறும் கோணல் மொச்சைகளும், மறைந்துதான் .., புளூ லேபல், ஒப்பனை நிழல், பிளைக் அன்ட் வைட் (Black and White) மொழி ஆடுகளுடன் வார்த்தையாடுதல், குளிர் வாடை, இரும்புப் பறவைகள், கிறக்கம், றக்கி, எச்சில் பால், சர்ப்பப் பாதை, கங்காரு, வேட்டைவாளிகள், சன்னம், திரும்புதல், தளர்வு, சடையன், துடிப்பு, C.V.F., முறைப்பாடு, தப்பு, வலச போனவங்க, முற்றுகை, தப்பித்தல் ஆகிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்