15700 குப்பி (சிறுகதைகள்).

வெற்றிச்செல்வி. சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-942420-2-4.

உலகறிந்த, உன்னதமான ஒரு போராட்டத்தைச் சுமந்த போராளிகளைப் பற்றிய எளிமையான சித்திரங்கள் இக்கதைகள். அதிகமாகப் பேசப்படாத,  அறியப்படாத போராளிகளின் கதைகளை அறியுமொரு திறவுகோல் தான் குப்பி. ஈழத் தமிழ் இனத்திற்காகத் துப்பாக்கிகளைச் சுமந்த போராளிகளின் வாழ்வின் பக்கங்கள் இவை. காட்டுராணி, உறுதி வார்த்தை, காருண்யம், கடலரசி, தமிழவள், கடிதக் காதல், துணிவு, போர்க்காலப் பிரசவம், கவிச்சுடர், மரணச் செய்தி, காந்தி, ஆட்சேர்ப்பு, பசுமதி, சாதனா, மாதுமை, அருணா, தம்பி, வீரன், துலாஞ்சலி, உயிர்விடும் முன், மாதவன், அண்ணன் தங்கை, காவு வண்டி, கல்விக்கு முதலிடம், மேஜர் அருணா, குமரன் புத்தகசாலை, இடப்பெயர்வு முத்தங்கள், மதி, இருப்பு, கோடுகள் மரமாகின்றன ஆகிய 30 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சக தோழர்கள் மீது கொண்ட நட்பு, கையறுநிலையில் உள்ள எதிரிமீது அவர்கள் காட்டும் கருணை, மரணத்துள் வாழ்தல், போர்க்களத்தின் கண்ணியமான கடமைகள் என்று இக்கதைகள் முழுவதும் ஒப்பற்ற விடுதலைப் போராளிகளின் புனித முகங்கள் தான் அசைகின்றன.

குப்பி: கதைகளின் தொகுப்பு.

வெற்றிச்செல்வி. யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது (இலங்கைப்) பதிப்பு, செப்டெம்பர் 2024, 1வது (தமிழகப்) பதிப்பு, ஓகஸ்ட் 2019. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

112 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15  சமீ., ISBN: 978-624-6567-02-6. 

ஈழத் தமிழ் இனத்திற்காகத் துப்பாக்கிகளைச் சுமந்த போராளிகளின் வாழ்வின் பக்கங்கள் இவை. அவ்வகையில் அதிகமாக வெளியுலகில் பகிரப்படாத அறியப்படாத போராளிகளின் உண்மைக் கதைகளை அறிந்துகொள்ளும் ஒரு திறவுகோலாக ‘குப்பி’ அமைந்துள்ளது. காட்டுராணி, உறுதி வார்த்தை, காருண்யம், கடலரசி, தமிழவள், கடிதக் காதல், துணிவு, போர்க்காலப் பிரசவம், கவிச்சுடர், மரணச்செய்தி, காந்தி, ஆட்சேர்ப்பு, பசுமதி, சாதனா, மாதுமை, அருணா, தம்பி, வீரன், துலாஞ்சலி, உயிர் விடும் முன், மாதவன், அண்ணன் தங்கை, காவு வண்டி, கல்விக்கு முதலிடம், திடம், குமரன் புத்தகசாலை, இடப்பெயர்வு முத்தங்கள், மதி, இருப்பு, கோடுகள் மரமாகிறது ஆகிய முப்பது கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. வரலாறாகிப்போன ஈழ விடுதலைப் போராட்டத்தில் களமாடிய போராளிகளைப் பற்றிய எளிமையான சித்திரங்களே இக்கதைகள். இப்போராளிகள் மானுடம் மீதும் விடுதலை மீதும் எத்தகைய பேரன்பைக் கொண்டிருந்தார்கள் என்ற புரிதலை இக்கதைகள் எவருக்கும் ஊட்டக்கூடியவை. சக தோழர்கள் மீது கொண்ட நட்பு, கையறுநிலையில் உள்ள எதிரிமீது அவர்கள் காட்டும் கருணை, மரணத்துள் வாழ்தல், போர்க்களத்தின் கண்ணியமான கடமைகள் என்று இக்கதைகள் முழுவதும் ஒப்பற்ற விடுதலைப்போராளிகளின் புனித முகங்கள் தான் நிழலாடுகின்றன.

ஏனைய பதிவுகள்

12017 – மனோதத்துவமும் கலையும் போதனாமுறையும்.

பாலு (இயற்பெயர்: சக்தி அ. பாலஐயா). கொழும்பு 12: போதனா பிரசுராலயம், 364, பழைய சோனகத் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1952. (கொழும்பு 13: நேரு அச்சகம், 94-1, மேட்டுத் தெரு, Hill

Bonne Vegas Internet casino

Blogs Have to Gamble Now? We have found All of our #1 Choice of No deposit Gambling establishment Different varieties of Totally free Revolves Incentives