மனோ சின்னத்துரை. சென்னை 600 005: கருப்பு பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (சென்னை 600005: ஜோதி எண்டர்பிரைசஸ்).
152 பக்கம், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 21.5×14 சமீ.
கொரோனா உள்ளிருப்புக் காலம் (Corona Lock Down Period) ஆசிரியரின் உளநெருக்கடிகளுக்கான வடிகாலாக அமைந்துள்ளது. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த தனக்கு உள்ளிருப்புக் காலம் பெரும் சவாலாக அமைந்திருந்ததாகவும் எழுதிக் கடப்பதைத் தவிர தனக்கு வேறு வழியிருக்கவில்லை என்கிறார் ஆசிரியர். அவரது கொரோனாக் கதைகளின் வருகை இவ்வாறே அமைந்திருக்கிறது. இத்தொகுப்பில் என்னூட்டம், முன்னூட்டம், பின்னூட்டம் ஆகியவற்றுடன் தெய்வம், பதுமை, கொரோனா வீடு, அம்மாவின் வானொலிப் பெட்டி, ஒன்றுமேயில்லை சின்னக் காயம் தான், தழும்பு, இலங்கை வேந்தன், கிளாரா, மழை, எலோதிக் கிழவி, வாழ்வதற்கு வயசில்லை, ஒரு கிலோ மிளகாய்த் தூள், இதுவும் கடந்து போகும், மயில், விதை நிலம், தவிப்பு, பார்வதி, வெளிச்சம், உயிர்வதை நாட்குறிப்பு, ஒத்திகை, அப்பா எப்ப வருவார், வாழ்வை வெல்வதே வாழ்க்கை, அப்பாவும் பீ.எம்.டபிள்யூவும், நல்லதங்காள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 24 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.