15705 சத்தியம் மீறியபோது.

வீ.எஸ்.கணநாதன். சென்னை 600 002: First Print, No. 89 (50), General Patters Road, Opposite Hotel Sarmani, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை 600 002: First Print).

xii, 154 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

சத்தியம் மீறியபோது, அக்காவின் ஆதங்கம், சட்டத்தின் முன்னால், செல்லப் பிராணி உஞ்சு, உலாந்தா முருங்கை மரம், யுத்தம் இல்லா உலகம் கேட்டேன் ஆகிய ஆறு சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. சத்தியம் மீறியபோது-யுத்தகால நெருக்கடியான காலத்தில் கொழும்பு யாழ்ப்பாணம் சென்னை ஆகிய மூன்று நகரங்களுக்கிடையே நடைபெறும் ஒரு முக்கோணக் கதை இது. சமூகத்தில் செல்வாக்கோடு வாழ்ந்த ஒரு மூதாட்டி, தனது மகனுக்கு பாரமாக இருக்க விரும்பாமல் கொந்தளிக்கும் கடலில் ஒரு சாதாரண படகிலே புகலிடம் தேடி துணிச்சலுடன் தப்பியோடும் வரலாறு. அக்காவின் ஆதங்கம்-புகலிடத்தில் வாழும் ஒரு அக்காவின் கதை. சட்டத்தின் முன்னால்- இந்தியாவிலே பெற்ற பிள்ளையை குப்பைத் தொட்டியிலும் காவல் நிலையத்திலும், பொது இடங்களிலும் போட்டுவிட்டுப் போகும் நடைமுறை வழக்கத்தைப் பற்றி பேசுகின்றது. செல்லப் பிராணி உஞ்சு-யாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணிகளான நாய்களுக்கு வீடுகளில் பல்வேறு பெயர்கள் இருப்பினும் உஞ்சு என்ற பொதுப்பெயரே நிரந்தரமாகிவிட்டதை விளக்கும் சுவையான கதை. உலாந்தா முருங்கை மரம்-காணாமல் போனவர்களின் குடும்பத்தவரின் அவல வாழ்வை நெருடலுடன் பதிவுசெய்யும் கதை. யுத்தம் இல்லா உலகம் கேட்டேன்-இதுவும் புலம்பெயர் வாழ்க்கையின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதையாகும். இந்நூலாசிரியர் அவுஸ்திரேலியாவில் குடும்பத்தினருடன் வாழ்ந்து  வருகிறார். முதியோரின் வாசிப்பு வசதிக்காக இந்நூல் பெரிய எழுத்துப் புத்தக பாணியில் வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர், ஈழத்தின் பிரபல்யமான தமிழ் கட்டிடக் கலைஞர் வீ.எஸ். துரைராஜாவின் இளைய சகோதரர் ஆவார்.

ஏனைய பதிவுகள்

Pony Racing Rules

Blogs A knockout post | Playing Method Euro 2024: Licensed Communities, Fixtures, Kickoff And much more How can you Have fun with the 21 Card