சமரபாகு சீனா உதயகுமார். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6, 5/3A, எட்வேர்ட் அவென்யூ, ஹவ்லொக் டவுன், 1வது பதிப்பு, ஜுன் 2014. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).
xii, 163 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 19.5×15 சமீ., ISBN: 978-955-53921-9-8.
சமரபாகு சீனா உதயகுமாரின் எட்டாவது நூலான ‘சித்திரா ரீச்சர்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா வல்வெட்டித்துறை சமரபாகு கிராமத்தில் 29.07.2014 அன்று நடைபெற்றது. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். இத்தொகுப்பில் மழை, ஒரு காதலி ஒரு நண்பன், மறுபடியும், வெகுமானங்கள், துளிர்மானம், சித்திரா ரீச்சர், ஆலமரம், நட்சத்திரப் பொருத்தம், தவிப்பு, ஒரு நாள், சொத்து ஆகிய 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை கடந்த இருபது ஆண்டுகளில் இவரால் எழுதப்பட்டு ஊடகங்களில் பிரசுரமானவை. இக்கதைகள் நாளாந்த வாழ்வை இயல்பாக கலைத்துவத்தோடு சொல்கின்றன. கொழும்பு மீரா பதிப்பகத்தின் 104ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது.