தி.ஞானசேகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2021. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
428 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ., ISSN: 2478-0340.
ஞானம் சஞ்சிகையின் 250ஆவது இதழ் (ஒளி 21, சுடர் 10. மார்ச்; 2021), பரிசுச் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. 2005 தொடக்கம் ஞானம் சஞ்சிகையினர் நடத்தி வந்துள்ள 19 சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற 57 சிறுகதைகளையும், முத்திரைக் கதை ஒன்றையும், புதிய பரம்பரை எழுத்தாளர்களுக்காக இரு தடவைகள் நடத்தியிருந்த போட்டிகளிலிருந்து ஒவ்வொரு சிறுகதையுமாக மொத்தம் 60 கதைகளை இவ்விதழ் கொண்டுள்ளது. ஞானம் நடத்திய இத்தகைய போட்டிகளூடாக தலைமுறை இடைவெளியின்றி ஈழத்தின் பல பிரதேச எழுத்தாளர்கள் 49 பேரை இனங்காண்கிறோம். இவர்களுள் 13பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பங்குபற்றித் தெரிவாகியுள்ளனர். இவர்களுள் பெண் எழுத்தாளர்கள் 12பேரும் மலையக எழுத்தாளர்கள் 7பேரும் அடங்குவது கவனத்திற்குரியது. பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் எழுதிய ‘ஈழத்து ஆரம்பகால சஞ்சிகைகளும் சிறுகதைப் போட்டிகளும்’, ஞானத்தில் தமது முதலாவது சிறுகதையை எழுதிய எழுத்தாளர்களின் பட்டியல், ஞானத்தில் வெளிவந்த மொழிபெயர்;ப்புச் சிறுகதைகள் விபரம் என்பன பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன. சாரங்கா, தாட்சாயணி, முல்லைமணி, மாதுமை, ச.முருகானந்தன்(2), கார்த்திகா பாலசுந்தரம் (2), ஓ.கே.குணநாதன் (2), தீரன் ஆர். எம்.நௌஸாத் (2), கார்த்திகாயினி சுபேஸ் (3), கே.எஸ்.சுதாகர் (2), தெ.நித்தியகீர்த்தி, கமலினி சிவநாதன், இ.இராஜேஸ்கண்ணன் (3), சந்திரகாந்தா முருகானந்தன், புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், ஹேமந்த கருணாகரன், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அகளங்கன் (3), பவானி சிவகுமாரன், வேரற்கேணியன் எஸ்.பி.கிருஷ்ணன் (2), கேணிப்பித்தன் ச.அருளானந்தம், சா.அகிலேஸ்வரன் (2), கண மகேஸ்வரன், நல்லையா சந்திரசேகரன், கே.கே.அருந்தவராஜா, நவஜோதி ஜோகரட்ணம், சூசை எட்வேட், மாலாதேவி மதிவதனன், ஆவூரான், அனுராதா பாக்கியராஜா, எஸ்.ஐ.நாகூர்கனி (2), மைதிலி தயாபரன், மூதூர் மொஹமட் ராபி, உ.நிசார், தேவகி கருணாகரன், அண்டனூர் சுரா(2), அஸாத் எம்.ஹனிபா, சவுந்தரராசா லிசாந்தினி, ஈழநல்லூர் கண்ணதாசன் (3), முஸ்டீன், என்.நஜ்முல் ஹுசைன், எஸ்.சிவகலை ஆகிய படைப்பாளிகளின் சிறுகதைகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.