15714 துயிலாத ஊழ்: சமகால ஈழச்சிறுகதைகள்.

அகரமுதல்வன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600 089: நூல்வனம், M22, 6th Avenue, அழகாபுரி நகர், ராமாபுரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (சென்னை: ரமணி பிரின்ட் சொலுஷன்ஸ்).

240 பக்கம், விலை: இந்திய ரூபா 200.00, அளவு: 18×12 சமீ., ISBN: 978-81-9337-342-2.

யுத்தப் பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயரம், தாயகத்தினுள் உறவுகள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழநிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணைகொண்டு நிலைநிறுத்துகின்றது. அப்பாவின் புகைப்படம் (தமிழ்நதி), வேரோடி (உமையாழ்), பேரீச்சை (அனோஜன் பாலகிருஷ்ணன்), சாத்தானின் கால்கள் (சாதனா), குசலாம்பாள் என்னும் செயின் புளொக் (யதார்த்தன்), வாழவைக்கும் நினைவுகள் (வெற்றிச் செல்வி), பூரணம் (சயந்தன்), காவலன் (தீபச்செல்வன்), கலையரசி (சந்திரா இரவீந்திரன்), உப்புக் காற்றில் உலரும் கண்ணீர் (சர்மிலா வினோதினி) ஆகிய சிறுகதைகளை இந்நூல் கொண்டுள்ளது. இந்நூலில் எழுதியுள்ள பத்துப் படைப்பாளிகளும் தனித்துவமான கதையுலகத்தைக் கொண்டவர்கள். தமிழ் அகவெளிக்குள் நிகழும் முரண்களும் அடையாளங்களும் அரசியல் பக்கச்சார்புகளாலே பெரிதும் தோற்றம் கொள்கின்றன என்னும் உறுதியான தரிசனத்தை இக்கதைகள் கொண்டுள்ளன. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரவலத்தின் பின்னான ஈழ நிலத்தின் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர்களுள் இத்தொகுப்பில் உள்ளவர்களும் அடங்குவர். ஈழ அரசியலில் இயக்க முகாம்களின் மனநிலை கடந்து தொகுக்கப்பட்டிருக்கும் தொகுப்பு இது.

ஏனைய பதிவுகள்

Zeus Video slot

Blogs Ready to Enjoy Moving Guitar The real deal? Free Revolves Bonus: Awaken To help you 2 hundred Totally free Spins Play’n Wade As to