ஆரபி சிவஞானராஜா. யாழ்ப்பாணம்: ஆரபி சிவஞானராஜா, முகிழ்நிலை ஆசிரியை, தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஆடி 2005. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி பிரின்டர்ஸ், தாவடி).
(8), 35 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
இந்நூலில் மாற்றங்கள் இங்கே மறுப்பதற்கில்லை, மனங்கொத்தி மனிதர்கள், இந்தப் பூக்கள் பறிப்பதற்கல்ல, தேயாத நிலவுகள், அவர்களும் மனிதர்கள் தான் ஆகிய ஐந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆரபி சிவஞானராஜாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இது. மனிதர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரே மாதிரி நடந்துகொள்வதில்லை. அவர்களின் உணர்வு வெளிப்பாடுகளும் எப்போதும் ஒரே மாதிரியானவையுமல்ல. மனித உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடையே நடக்கும் போட்டியில் வெற்றிபெறுவது எதுவோ அதன் வழியே மனித வாழ்க்கை தடம்மாறி விடுவதுண்டு. இத்தகைய இன்றைய வாழ்வில் ஆரபியைப் பாதித்த பல்வேறு விடயங்களை இக்கதைகளின் வழியே எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார்.