15719 நிகழ்காலத்தில் வாழ்தல்.

வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572 A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (திருக்கோணமலை: ஏ.ஆர். டிரேடர்ஸ், திருஞானசம்பந்தர் வீதி).

144 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-78979-5-8.

கலாபூஷணம் வீ.என்.சந்திரகாந்தியின் ஏழாவது வெளியீடான ‘நிகழ்காலத்தில் வாழ்தல்’ அவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. வீரகேசரி வாரமஞ்சரி , தினக்குரல் வாரமலர், ஞானம், ஜீவநதி ஆகியவற்றில் பிரசுரமான நிகழ்காலத்தில் வாழ்தல், அக்கினிப் பூக்கள், சிறுபிள்ளைத்தனம், வருவது போல் வரும், மங்கை ஒரு வேங்கையாக, நிமா என்கின்ற நிரோஷிமா, என்னவள் நீதானே, உந்துருளி, கைபேசி, நனவாகும் கனவுகள், சுடுபவனுமாய் சூடுபடுபவனுமாய், சம்ஹாரம் ஆகிய பன்னிரு சிறந்த சிறுகதைகள் இத் தொகுப்பில் இடம் பிடித்துள்ளன. இத்தொகுப்பிலுள்ள  ஒவ்வொரு கதையும் வேறுபட்ட பின்புலங்களில் புனையப்பட்டுள்ளமை சிறப்பம்சமாக உள்ளது. வாசகர்கள் அறியாததும் ஆசிரியர் மட்டுமே நேரடியாக அனுபவித்து அறிந்ததுமான கருக்கள் ஒவ்வொரு பின்புலத்திலும் சிறப்பாக சித்திரிக்கப்பட்டுள்ளன. கதையின் முடிவுகள் எதிர்பாராதனவாக உள்ளதுடன் கதையோட்டம் எங்கும் திசை திரும்பாமல் சிறுகதைக்குரிய நியதியுடன் செல்கின்றது.

ஏனைய பதிவுகள்

Gratification Sans nul Annales 2023

Ravi Dangers En Bonus À l’exclusion de Archive Contrée Amenant Le plus Avec Publicités Ainsi que de Caractères Pourboire À l’exclusion de Conserve Vous n’avez

14583 எல்லையற்ற வான்வெளியில்.

அனுராதா. கொழும்பு 6: ஸ்ரீநிதி பதிப்பகம், 42/11, முதல் தளம், சுவி சுத்தர்ராம வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (சென்னை 14: சீனிவாசா ஆப்செட்). 112 பக்கம், விலை: ரூபா 250.,