15720 நிமிர்வு: சிறுகதைத் தொகுப்பு.

அநாதரட்சகன் (இயற்பெயர்: மு.இராசநாயகம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2012. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

(25), 26-128 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-3376-5.

முதலாளித்துவ சமூக அமைப்பு வேரூன்றி, மத்தியதரவர்க்கம் நிலைபேறு அடையும் போது புதிய சமூகவமைப்பின் அமுக்கம் தனிமனிதர்களின் வாழ்க்கையில் தோற்றுவிக்கும் நெரிசலும், மனமுறிவும், சலனங்களும் இறுக்கமாக வெளிப்படுத்தப்படக்கூடிய இலக்கிய வடிவமாக சிறுகதை செல்வாக்கு பெறுகிறது. அத்தகைய செல்வாக்கை அநாதரட்சகனின் கதைகளில் காணமுடிகின்றது. இந்நூலில் திருப்பம், சபலம், சிதைவு, பசித்த மனம், நிமிர்வு, ஆறா அவலம், வைராக்கியம், தவிப்பு, சீருடை, விகற்பம், மனச்சிறை, இழப்பு ஆகிய பன்னிரு சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் விகற்பம், வைராக்கியம் ஆகிய கதைகள் சாதிப் பிரச்சினை பற்றியவை. இதில் வைராக்கியம்- மலையகத்தில் சாதி என்பது எவ்வாறு ஒரு கலாச்சார முரண்பாடாக உள்ளது என்பதையும் அது வாழ்வில் காதலில் தோற்றுவிக்கக் கூடிய முரண்பாடுகளையும், இறுதியில் அதனையும் மீறிக் காதல் வெற்றி பெறுவதையும் ஆசிரியர் படைப்பாக்கியிருக்கிறார். விகற்பம்- யாழ்ப்பாணத்தில் போருக்குப் பின்னர் நிலவிய சாதிய உணர்வுகள் பற்றியதாக அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்