15723 நிறச் சட்டையும் நிர்மலா ஆசிரியரும் (சிறுகதைகள்).

மயூரதன் (இயற்பெயர்: கந்தையா மயில்வாகனம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: கந்தையா கனகம்மா நிதிய வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

vi, 98 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-50-4.

பிரிதல் அல்ல புரிதல், பிரிவும் இணைவும், அறிதல் அல்ல புரிதல், கற்றுக்கொள்ள கனக்க இரக்கு, உறவுகள் உறவுக்காகவல்ல, மலரொன்று மலர்கின்றது, தாமரையும் கௌரியும், அப்பாவும் ஆய்வுகூட அறிக்கையும், காவொலையொன்று காற்றிலாடுது, இளமையில் அல்ல முதமையில், சிலுவைகள் சுமக்கின்றொம், நிறச்சட்டையும் நிர்மலா ஆசிரியரும், தாயும் தாரமும், அறவாழி அவுணர்கள் ஆகிய 14 சிறுகதைகளைக் கொண்டுள்ள தொகுப்பு. நூலாசிரியர் தென்மராட்சியின் நாவற்குழிப் பிரதேச வேலன்பராய்க் கிராமத்தைச் சேர்ந்தவர். இது 162ஆவது ஜீவநதி வெளியீடாகும். கந்தையா கனகம்மா நிதியத்தினரின் இரண்டாவது வெளியீடாகவும் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

10403 அஞ்சலோட்டம்.

சி.மௌனகுரு. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,