15724 நினைவுகள் சுமந்து.

எம்.சிவசோதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0958-04-7.

வடமராட்சியின் கரவெட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர் நூலாசிரியர் எம்.சிவசோதி. வடமராட்சிக்கேயுரித்தான பண்பாடு, பழக்கவழக்கம், மொழி, வாழ்வியல் முதலானவற்றை இத்தொகுப்பிலுள்ள தன் கதைகளில் இவர் பிரதிபலிக்கத் தவறவில்லை. இன்று நாம் மறந்துபோன பிரதேசச் சொற்களை, பழமொழிகளை, மரபுச் சொற்றொடர்களை தனது கதாபாத்திரங்களினூடாகப் பதிவுசெய்துள்ளார். இத்தொகுப்பில் தை பிறக்கட்டும், அக்காச்சி வந்தா, கிராமத்து நினைவுகள், பாதை மாறிய பயணங்கள், கண்ணகை, காத்திருப்பு, நினைவுகள் சுமந்து, பேதை, தொட்டில் பழக்கம், மனிதம் ஆகிய பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சிவசோதிக்கு இயற்கையுடனான ஈடுபாடு கதைகளின் வர்ணனைகளில் புலப்படுகின்றன. இது ஜீவநதியின் 91ஆவது வெளியீடு.

ஏனைய பதிவுகள்

Tragamonedas Desprovisto Depósito

Content ¿â qué es lo primero? Máquinas Tragamonedas Progresivas Podrán Pagar El Accésit De más grande Más Gran? Los primero es antes Pasa En caso