வெற்றிச்செல்வி (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).
xviii, 193 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 650., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-96760-0-8.
போர்க்கால பங்கர் (பதுங்குகுழி) வாழ்க்கை குறித்தான 30 உண்மைக் கதைகள் பங்கர் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. இதில் வேல்விழி (சுடுகாடும் தெளிநீரும்), த.கோணேஸ்வரன் (ஆனையிறவு, சத்தியமூர்த்தி), புதியவன் (ஆபத்தில்லா ஆபத்துகள்), ரஞ்சுதமலர் (பதுங்குகுழி), குலசிங்கம் வசீகரன் (ஜோர்ஜ் மாஸ்டர், சொல்லாத செய்தி), சிவச்சந்திரன் (புக்காரா), கமலா வாசுகி (வீடே பதுங்குகுழியாக), வெற்றிச்செல்வி (செல்வம் இழந்த கதை, கரைய மறுக்கும் கணங்கள்), மதுராங்கி (உயிர்காத்த உத்தமி), ஆதி.வி (மழைக்கால களமுனைகள், உயிர் கொடுத்து உயிர் மீட்டல்), சித்திரா (பிஞ்சு மனம்), இசையாளன் (கதிர்மதி), ந.கண்ணதாஸ் (கனவுகள்), அருவி (முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர்), இளங்கீரன் (மூடுபங்கர்), வட்டக்கச்சி வினோத் (யார் காரணம்), யாழ்.தர்மினி பத்மநாதன் (கிடங்கு வீடு), மிதயா கானவி (அவனின் கடவுள்), கானநிலா (உயிர்காப்பு), ஈழநல்லூர் கண்ணதாசன் (ஈழத்தாயாச்சி), யோ.புரட்சி (பங்கர் பிரவேசம்), முல்லையூர் இராஜ்குமார் (காலத்தின் சுவடு), தபோதினி (நானும் மகனும்), விவேகானந்தனூர் சதீஸ் (சத்தியமூர்த்தி அண்ணா), மதிசுதா (ஈரச்சாக்கும் சக்கரவானமும்), அருணா (அடங்கா தவனம்) ஆகிய 26 படைப்பாளிகளின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.