15728 பச்சைக் காவோலை: சிறுகதைத் தொகுப்பு.

எஸ்டி.சிங்கம் (இயற்பெயர்: எஸ்.தர்மகுலசிங்கம்). கனடா: தமிழ் பண்பாட்டுக் கழகம், ரொறன்ரொ, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough).

116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

இத்தொகுப்பில் தைராசி, ஏமாற்றம், அக்கா, மத்தாப்பு, பச்சைக் காவோலை, உத்தமி, பாதி உறவுகள், மரங்கொத்தி, தனி ஆவர்த்தனம், சுடும் நிலவு, காயங்கள், தூவானம், கைம்மை, இதுதான் காதலா, கண்ணீர்க் குண்டு ஆகிய பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஈழத்தமிழரின் தாயகத்தின் சமூக பண்பாட்டு வாழ்க்கை, புகலிட தேசங்களில்-குறிப்பாக கனடாவில் அவர்களின் வாழ்வுமுறைகள், பண்பாட்டுச் சிக்கல்கள்-சிதைவுகள், என்பவற்றின் அடிப்படையில் காணப்படும் வாழ்க்கைச் சிக்கல்கள், பண்பாட்டு நழுவல்கள், போலி வாழ்க்கை முறைகள் எனப் பல்வேறு விடயங்களையும் இக்கதைகள் தொட்டுச் செல்கின்றன. கனடா மாப்பிள்ளை தாயகத்திற்குச் சென்று ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வந்து கொடுமைப்படுத்தும் அநியாயங்களையும், கனடாவில் வாழும்  எம்மவர்களில் சிலரின் பகட்டு வாழ்க்கை முறைகளையும், அதனால் கவரப்பட்டு சீரழியும் தாயக உறவுகள் சிலரையும் ஆசிரியர் துல்லியமாகச் சித்திரித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Flames Joker Slot machine

Posts Bonanza slot free spins: Flame Joker Spelautomat Scatter Icon Flames Joker Slot machine game Bonus The Rating On the Position Unique Icon Retrigger Sure,