15757 அந்த 18 நாட்கள்: எதார்த்த நாவல்.

கலையார்வன் கு.இராயப்பு. யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர் பிரின்டர்ஸ்).

xvi, 152 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-955-0197-07-1.

1963ஆம் ஆண்டு குருநகரில் (யாழ்ப்பாண மாவட்டம்) இருந்து முல்லைத் தீவுக் கடற்பரப்பின் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இயந்திரக் கோளாறால் செயலற்று காற்றில் அகப்பட்டு சமுத்திரத்தில் பலநாட்கள் தத்தளித்து இந்தியாவின் ஒரிசாவுக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஐந்து மீனவர்களின் உண்மை வரலாறே கலையார்வனின் கைவண்ணத்தில் நாவலாக உயிர்பெற்று நெடுங்கதை வடிவத்தில் எழுத்துருவாகியுள்ளது.  அந்த மீனவர்கள் கடலில் தவித்த 18 நாட்கள் தான் நாவலின் பெயர். ஆனால் மீனவர்கள் 14.06.1963 அன்று வீட்டிலிருந்து புறப்படுவது தொடக்கம் 17.11.1963 அன்று மீண்டும் வீடு திரும்பும் வரையான 155 நாட்களை நாவலின் கதைக்களம் கொண்டுள்ளது. இப்பயணத்தை மேற்கொண்ட ஐவருள் ஒருவரான பத்திநாதர் பீற்றர் (நவீன்சந்திரன்) தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் ரொரன்ரோ நகரில் வாழ்ந்து வருகிறார். இந்நூலுக்கான அனுபவக் குறிப்பொன்றினை அவரே வழங்கியிருக்கிறார். அது நூலுக்குச் சிறப்புச் சேர்த்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Tratar Tragamonedas De 5 Tambores

Content Gonzos quest $ 1 Depósito: Dudas Serios De Tragamonedas Carente Descargar ¿deseas Jugar A los Slots Sin cargo Referente a Castellano Falto Tener Que