15763 உயிர்: நெடுங்கதை.

மு.சிவலிங்கம். கொட்டகலை: குறிஞ்சித் தமிழ் இலக்கிய மன்றம், தமயந்தி பதிப்பகம், 56, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், 1வது பதிப்பு, நவம்பர் 2018. (கொட்டகலை: அச்சக விபரம் தரப்படவில்லை).

136 பக்கம், விலை: ரூபா 500.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-71218-0-2.

மலையக எழுத்தாளரான மு.சிவலிங்கம் இந்நாவலில் மலையகத்திற்கு மட்டுமன்றி இலங்கை முழுவதற்குமான மருத்துவ உலகம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசியுள்ளார். மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பயங்கரமான நோய்கள், அவற்றோடு கணந்தோறும்போராடும் நோயாளிகள், அவர்கள் தங்கியிருக்கும் வைத்தியசாலைகள்,  வியாபாரமே இலக்கான மருந்து விற்பனையாளர்கள், தரகர்கள், காலாவதியான மருந்துகள், கலப்படமான மருந்துகள், கொள்ளையர் உலகமான தனியார் வைத்தியசாலைகள், மனித நேயமற்ற பணியாளர்கள், மனிதநேயமுள்ள பணியாளர்கள், அவ்விதத்தில் அவர்களுக்குரிய சவால்கள், வைத்தியசாலைகளில் எப்போதாவது  நிகழும் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றவாறாக மருத்துவ உலகப் பிரச்சினைகள் இனி இல்லையெனுமளவிற்கு துல்லியமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன. மேலைத்தேய வைத்திய முறைகள்-பாரம்பரிய வைத்திய முறைகள் ஆகிய இரு வேறு வைத்திய முறைகளின் நிறை, குறைகளை அணுகி அவை இரண்டுமே இணைந்து உருவாக வேண்டிய வைத்திய முறை பற்றியும் குறிப்பிட்டு வைத்திய உலகை இந்நாவல் சிந்திக்கத் தூண்டுகின்றது.

ஏனைய பதிவுகள்

Sweet Bonanza Position

Blogs A few When selecting A plus Pick Harbors Demonstration To experience Harbors Extra Games To the Cellular Incentive Series Online slots Bonus rounds to