15784 நெஞ்சு பொறுக்குதில்லையே: குறும் நவீனம்.

முத்து சம்பந்தர். குண்டசாலை: மக்கள் கலை இலக்கிய பேரவை, மேகலா,இல.86, கம்முதாவ, 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiv, 66 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 19×14 சமீ., ISBN: 955-98105-0-2.

மலையகச் சமூக அமைப்பானது தாம் இழப்பதற்கென்று சொத்துடைமை ஏதுமற்ற தொழிலாளர்களுக்கும் உழைப்பைச் சுரண்டுபவர்களான மூலதனக் காரர்களுக்கும் இடையிலான உற்பத்தியின்மையையும் உற்பத்தி உறவினையும் பிரதிபலித்து நிற்பதாக அமைந்து காணப்படுகின்றது. இவ்வுறவானது நேச முரண்பாடாகவன்றி பகை முரண்பாடாகவே அமைந்துள்ளமை மலையக சமுதாயத்து மனித ஊடாட்டத்தின்  அடிப்படை அம்சமாகக் காணப்படுகின்றது. இந்தப் பகைப்புலத்தில் இக்குறுநாவல் படைக்கப்பட்டுள்ளது. முத்து சம்பந்தர் மக்கள் கலை இலக்கியப் பேரவையின் தலைவராவார். கண்டி கலைமகள் வித்தியாலய அதிபராகவும், போலீஸ் உபசேவையில் பரிசோதகராகவும் கடமையாற்றும் இவர் சிறந்த கவிஞரும், கலைஞருமாவார். பாட்டாளி மக்களது உள்ளுணர்வுகளை படம்பிடித்து கவிதைகளாகவும் கதைகளாகவும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் இவர் தனது படைப்புத் திறத்தாலும் கலையாற்றலாலும் பலரையும் கவர்ந்தவர்.

ஏனைய பதிவுகள்

Pay By Mobile Casino Uk

Content Tip 7: Shop Around To Find The Top Casino Online Get Up To 500 Free Spins Playzee We hope that this casinolead.ca why not