15789 மிதுனம் (நாவல்).

குறமகள் (இயற்பெயர்: வள்ளிநாயகி இராமலிங்கம்). கனடா: கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், 1வது பதிப்பு, தை 2012. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough).

144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

திலகமணியும் பொன்னம்மாவும் ஒரு புதிய நாடு, புதிய மொழி, கலாச்சார வேறுபாடுகளுள் சிக்கித் தவித்து எப்படிச் சீராக்கம் செய்துகொள்கிறார்கள் என்பது மேலோட்டமான கருப்பொருளாகும். குடியேற்ற நாட்டந்தஸ்து பெற்ற நாள் தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை தமிழனின் நிலை பற்றிய சம்பவங்கள் இப்பெருங்கதை மூலம் ஊடுபாவாகத் தொனித்துக்கொண்டேயிருக்கிறது. 65 வயதுடைய திலகமணி உள்ளக நோயாளியாக வைத்தியசாலையில் சேர்ந்த முதல் அனுபவத்தில் அந்த வாட் (Ward) இல் ஏற்கெனவே இருந்த 86 வயதுடைய எலிசபெத் வூட்ஸ் என்னும் வெள்ளை மாதின் கருணைக்கும் நட்புக்கும் ஆளாகிறாள். இறைமையுடன் கூடிய தாயக வாழ்வும் இடப்பெயர்வு, அகதிநிலை, புலப்பெயர்வு, ஊடான வாழ்வும் போன்ற சூழ்நிலைகளினால் அவநம்பிக்கை சிந்தனையாளராகி முதுமையில் தேற்றம் பெற்று சமூக சேவையாளராகி பின்னர் முதல்வர் பதவி ஏற்கும் திலகமணி. பண்ணையிலிருந்து நகரத்திற்கு ஓடிவந்து தெருத்தூங்கியாகி அடிமட்ட வேலைகள் செய்து, பின்னர் அமைப்பு ஒன்றில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து பிரபு ஒருவரின் ஆயாவாகி, மனைவியாகி, பிற்காலத்தில் மீண்டும் தெருத்தூங்கியாகி விட்ட ஒளிவீசும் மனோநிலை கொண்ட எலிசபெத் வூட்ஸ், காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற உடை, நடை, பாவனை, மொழி போன்ற கலாசார மாற்றங்களை விரும்பி ஏற்றதோடு தன்னைச் சேர்ந்தோரையும் தன்வழிக்கு ஈர்க்கும் ஸ்ரெலா எனும் பொன்னம்மாக்கா. இவர்களே இந்நாவலை சுவையாக நகர்த்திச் செல்கின்றார்கள். மிதுனம் என்பதற்கு இரட்டை என்றும் பொருள்கொள்ளும் ஆசிரியர், இரு கதைகள், இரு கலாசாரங்கள், இரு நாடுகள் எனக் கருத்திற் கொண்டு இந்நாவலுக்குத் தலைப்பிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்