15792 வளர் காதல் இன்பம்: குறுநாவல்.

கே.எஸ்.சுதாகர். சென்னை 600040: எழுத்து பிரசுரம், Zero Degree Publishing, 55(7), R.Block, 6th Avenue, Anna Nagar 1வது பதிப்பு, ஜனவரி 2021. (சென்னை: Repro India).

108 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-90053-11-7.

சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் நடத்திய உலகளாவிய குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசுபெற்ற படைப்பு. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஒருதலைக் காதலாக இருந்தாலும் அது வாழ்க்கையில் ஒரு அனுபவமே. சிலருக்குக் காதல் கசப்பாக இருக்கலாம், சிலருக்கு இனிப்பாக இருக்கலாம், எல்லாமே அவரவர் மனநிலையைப் பொறுத்தது. காதல் திருமணமாக இருந்தாலும், விட்டுக் கொடுப்பும், புரிந்துணர்வும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்றுமே இனிக்காது. இந்தக் குறுநாவலின் கதைக்களம் புலம்பெயர்ந்த மண் என்பதால் வாழ்க்கைமுறை எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டிருப்பதை, நாவலின் உபதலைப்புகளில் இருந்தே அறிய முடிகின்றது. காதல், இன்பம், துன்பம், சோகம், விருப்பு, வெறுப்பு, பொறாமை என்று கதையில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவரின் மாறுபட்ட மனநிலையையும் ஆசிரியர் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். உள்மனதில் ஏற்படும் உணர்வு மோதல்களை அடிக்கடி நினைவூட்டக்கூடிய படைப்புக்களே அழியாத காவியங்களாய் நிலைக்கின்றன. அத்தகைய ஒரு குறுநாவலே இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

Freispiele bloß Einzahlung 2023 Fix

Content Slott Spielbank – 10 Ecu je Download ein Androide App Wieso Präsentation Online CASINOS FREE SPINS Eingeschaltet? Ordentliche Alternativen dahinter Free Spins exklusive Einzahlung

13A14 – தமிழ் ஏழாந்தரம்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: தமிழ் மொழிக் குழு, பாடவிதான அபிவிருத்தி நிலையம், கல்வி வெளியீட்டுத்திணைக்களம், 3வது பதிப்பு, 1980, 1வது பதிப்பு, 1973, திருத்திய 2வது பதிப்பு, 1979. (சுன்னாகம்: திருமகள்