தெணியான். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
52 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-955-4676-65-7.
இக்குறுநாவல், போர்க்காலத்தின் பயணச் சிரமங்களைச் சகித்து மலையகத்தில் பணியாற்றப் புறப்பட்ட ஒரு இளம் ஆசிரியனின் மனதில் துளிர்த்த எண்ணங்கள் பற்றிப் பேசுகின்றது. ஒரு பெண்ணைப் பற்றிய அவனது தவறான அபிப்பிராயங்கள் உண்மை தெளிவானதும் எவ்வாறு சுக்குநூறாகிப் போகின்றன என்பதைச் சொல்லும் கதை இது. எம்மில்
பெரும்பான்மையானோர் தம்மிலிருந்து விலகியும் ஒதுங்கியும் தம் போக்கில் ‘சிவனே’ என்றிருக்கும் பெண்களைப் பற்றி நல்லபிப்பிராயம் கொள்வதில்லை. அப்பெண்ணைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளைக் கட்டி வேண்டாத புரளிகளைக் கிளப்பிவிடுவதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். அதில் ஒரு ஆத்ம திருப்தி அவர்களுக்கு. அதிலும் சக பெண்களுக்கு அப்படியான ஒதுங்கிவாழும் பெண்களைக் கண்டாலே பிடிக்காது. இப்படிப்பட்ட சூழலில் வாழ நேர்ந்த இக்கதையின் நாயகனும் அச்சூழலுக்கு இசைவாகி அவளைப் பற்றித் தப்பபிப்பிராயம் கொள்கின்றான்;. ஆனால் இறுதியில் அவளைப் பற்றிய பனித்திரை விலகி உண்மை வெளியாகியதும், அவனிடமும் குடிகொண்டிருந்த பனிமூட்டம் விலகுகின்றது. இந்நூல் 80ஆவது ஜீவநதி வெளியீடாக, தெணியானின் பவள விழாவன்று (15.07.2017) வெளிவந்துள்ளது.