சிரி குணசிங்க (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661, பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2006. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 142, அவிசாவளை வீதி).
(15), 16-256 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 955-20-9282-5.
சிங்கள இலக்கியப் பரப்பில் 1940களில் புதியதொரு சகாப்தத்தின் உதயத்தைக் காட்டுகின்றது. கதைசொல்லல் யுத்தியாக பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த ஒரு முறையை இந்நாவல் மாற்றியமைக்கின்றது. இது 1940களில் இலங்கைப் பல்கலைக்கழக வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட நாவல். சமுதாயத்தின் உயர் வகுப்பினரே அன்று பல்கலைக்கழகத்தை ஆக்கிரமித்திருந்தனர். இவர்கள் பல்கலைக்கழகத்தில் தங்கள் அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொண்டிருந்த போதும், அங்கே நிலவிய அறிவுமயமான சூழலை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாதிருந்தனர். இவர்கள் தேசிய சம்பிரதாயங்களையும் ஒழுக்கநெறிகளையும் கண்டு எள்ளிநகையாடினர். இந்நாவலின் கதைக்களம் பல்கலைக்கழகமாக இருப்பினும்அக்காலச் சமூக நடைமுறைகளை அது பிரதிபலிப்பதையும் ஆங்காங்கே காணக்கூயதாக இருந்தது. நிழல் நாவலின் கதாநாயகன் ஜினதாச செல்வந்த வகுப்பைச் சேர்ந்தவன். கிராமத்துப் பழக்கவழக்கங்களில் ஊறிப்போயிருந்த இவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்ததும் அப்பழக்க வழக்கங்களை உதறித் தள்ளிவிட்டு போலியானதொரு வாழ்க்கையை வாழத்துடிக்கிறார்கள். இதன்போது ஏற்படும் மோதல்களை இந்நாவலின் ஆசிரியர் பேராசிரியர் சிரி குணசிங்க துல்லியமாக ஆராய்கின்றார். கிராமிய மக்கள் மத்தியில் நிலவிய ஒழுக்க நெறிகளையும் நகரத்துப் படாடோப வாழ்க்கையையும் அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்த போதும் நடுநிலையில் நின்று இவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கவும் தவறவில்லை. இந்நூல் இலங்கையின் தேசிய சாகித்திய விழாவில் 2007ம் ஆண்டுக்குரிய விருதினைப் பெற்றது.