15807 தமிழ் வளர்த்த மானுடம்.

கந்தையா பத்மானந்தன் (புனைபெயர்: காரைக்கவி). யாழ்ப்பாணம்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, காரைநகர், 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Didital, 14, அத்தபத்து டெறஸ்).

x, 70 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5222-06-3.

காரைநகர் மண்ணின் கல்வித்துறை ஆளுமையாக மிளிரும் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் விஞ்ஞானத்துறையில் பட்டம் பெற்றவர். இலக்கியத்துறையில் உள்ள ஈடுபாட்டினால் தொடர்ச்சியாக  எழுதிவருபவர். இந்நூலில் தனது எழுத்துத் துறையில் மொழிசார் தேடலையும் அதன் மீதான ஆழமான புரிதலையும் வெளிப்படுத்தி நிற்கின்றார். இவர் எழுதியுள்ள தமிழர் வாழ்வியலில் இசை, தமிழர் வாழ்வியலில் மனிதநேயம், நட்பு எனும் சங்கத் தமிழர் நற்பண்பு, மழந்தமிழர் வாழ்வில் மனித உரிமைகள், சிலம்பில் ஒலிக்கும் குறள் பரல்கள் ஆகிய ஐந்து தமிழியல் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்