15808 தமிழிலக்கியத் திறனாய்வியலில் ஈழத்தின் முப்பெரும் ஆளுமைகள்.

நாகராஜ ஐயர் சுப்பிரமணியன்.  ஒன்ராரியோ: அமுதுப் புலவர் நான்காம் ஆண்டு நினைவுப் பேருரை, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

68 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கலாநிதிகள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, மற்றும் மு.தளையசிங்கம் ஆகியோரின் திறனாய்வியல்சார் இயங்குநிலைகள் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை. கனடாவில் ஒன்ராரியோ பிராந்தியத்தில் மார்க்கம் நகரில் ஆர்மடேல் சமூக நிலையத்தில் (Armadale Community Centre) 3011.2014 அன்று வழங்கப்பெற்ற அமரர் அமுதுப் புலவரின் நான்காம் ஆண்டு நினைவுப் பேருரை இதுவாகும். கலாநிதி நா. சுப்பிரமணியன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னைநாட் பேராசிரியராவார்.

ஏனைய பதிவுகள்

16614 அசை: சிறுகதைத் தொகுப்பு.

மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 124