ந.மயூரரூபன். பருத்தித்துறை: எழினி வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xiv, 94 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54304-4-9.
இந்தக் கட்டுரைத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள், புனைவிலக்கியத்தின் கோட்பாடுகள், கோட்பாட்டாளர்களின் கூற்றுக்கள், கோட்பாடுகளின் மையமான சில தனித்துவம் வாய்ந்த எண்ணக்கருக்கள் என்பனவற்றை மையப்படுத்தி ஆராய்கின்றன. சமூகவியல் அடிப்படையிலான திறனாய்வின் பல்பரிமாண நோக்கினை கட்டுரைகளில் அவதானிக்கமுடிகின்றது. அறிகைசார் வரைபடத்தின் அழகியல்: சில கவிதைக் கோடுகள், உடைபடும் சட்டகங்கள்: அலைவுறும் பிரக்ஞை, நம்பிக்கையின்மை: விட்டுவிலகும் பெருங் கதையாடல், வாழ்வனுபவம்: பழைய சல்லடையாக்கப்பட்ட கந்தற் துணி, ஆண் குறியாலான அதிகாரம்: காலம் கலங்கி மடியும் மந்திரம், மனமுதல் வாதம்: நிலமிழந்தவனின் நதி, அமைப்பாதல்: அர்த்தநிலை இணைவுகள், பொதுவுடமையாக்கப்பட்ட இருப்பு: பொதுப்புத்தியின் எதிர்முனைப் பயணம், எழுதுதல்: அகச்சொல்லுடன் சேரும் புறச்சொல், படைப்பின் உண்மை: அபத்தப் புலனாய்வு, முக்கோண உறவு: படைப்பின் விருப்பு, தூய்மைவாதம்: சுயங்களின் வகைமாதிரி, குலக்குறி இலக்கியம்: வாசிப்பின் மோட்சம், மன-உடல் இயந்திரம்: கருத்தியல் மீளுற்பத்தி, புனைவின் நிழல்: உயிரியம் சார் அரசியல் உண்மைகள், கைலாசபதி: மேற்கட்டுமான மார்க்சியம், கவிதை: திரவமொழி, மூடுபெட்டி: போதிக்கப்பட்ட கருத்தியல், கவிதை-கண்டாயம்-வாசிப்பு ஆகிய 19 தலைப்புகளில் எழுதப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.